ருக்யா: முழு உரையும் ஆதாரங்களும்
குர்ஆன் மற்றும் சுன்னாவிலுள்ள ருக்யா, உங்கள் மீதோ பிறர் மீதோ ஓதுவதற்கு, சிறு சிறு வாக்கியங்களாக, ஒவ்வொன்றாக: அரபு, தமிழில் உச்சரிப்பு, பொருள், துல்லிய ஆதாரம்.
ஸூரத்துல் ஃபாத்திஹா
தோற்றுவாய் (குர்ஆன் 1)
நபி ﷺ அவர்கள் இதைப் பற்றி, “இது ருக்யா என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள்.
-
أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
அஊது பில்லாஹிஸ் ஸமீஇல் அலீமி மினஷ் ஷைதானிர் ரஜீம்
எல்லாவற்றையும் கேட்பவனும், எல்லாவற்றையும் அறிந்தவனுமான அல்லாஹ்விடம், விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.
-
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ١
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
-
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ٢
அல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன்.
-
الرَّحْمَٰنِ الرَّحِيمِ ٣
அர் ரஹ்மானிர் ரஹீம்
(அவன்தான்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்,
-
مَالِكِ يَوْمِ الدِّينِ ٤
மாலிகி யவ்மித் தீன்
தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே).
-
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ٥
இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தஈன்
(அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.
-
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ٦
இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம்
நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!
-
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
ஸிராதல் லதீன அன்அம்த அலைஹிம்
(அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி.
-
غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ٧
கைரில் மக்ளூபி அலைஹிம் வ லள் ளால்லீன்
(உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.
குர்ஆன் 1:1-7 · புகாரி 5749 · முஸ்லிம் 2201a · திர்மிதி 2063 (ஸஹீஹ், அல்பானீ) · திர்மிதியின் அறிவிப்பில் (2063) இதை ஏழு முறை ஓதியதாக உள்ளது (ஸஹீஹ், அல்பானீ); எண்ணிக்கை இல்லாத அறிவிப்பையே திர்மிதி மிகச் சரியானதாகக் கருதினார் (2064).
ஆயத்துல் குர்ஸீ
குர்ஸீ பற்றிய வசனம் (குர்ஆன் 2:255)
-
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
-
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்
அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் இல்லவே இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்;
-
لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ
லா தஃகுதுஹூ ஸினதுவ் வ லா நவ்ம்
அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது.
-
لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ
லஹூ மா ஃபிஸ் ஸமாவாதி வ மா ஃபில் அர்ள்
வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே.
-
مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ
மன் தல் லதீ யஷ்ஃபஉ இன்தஹூ இல்லா பி இத்னிஹ்
அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்?
-
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ
யஃலமு மா பைன ஐதீஹிம் வ மா கல்ஃபஹும்
அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான்.
-
وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ
வ லா யுஹீதூன பி ஷைஇம் மின் இல்மிஹீ இல்லா பிமா ஷாஃ
அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து எதையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது.
-
وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ
வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல் அர்ள்
அவனுடைய ‘‘குர்ஸி' வானங்கள், பூமியைவிட விசாலமாய் இருக்கிறது.
-
وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ
வ லா யஊதுஹூ ஹிஃப்ளுஹுமா
அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமம் இல்லை.
-
وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ ٢٥٥
வ ஹுவல் அலிய்யுல் அளீம்
மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன்.
குர்ஆன் 2:255 · அறிஞர்களின் நடைமுறைப்படி ருக்யாவில் ஓதப்படுகிறது; ருக்யாவுக்கென இதைக் குறிப்பிடும் அறிவிப்பு எதுவும் இல்லை.
ஸூரத்துல் பகரா 285–286
பசு மாடு அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்கள் (குர்ஆன் 2)
-
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
-
آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ
ஆமனர் ரஸூலு பிமா உன்ஸில இலைஹி மிர் ரப்பிஹீ வல் முஃமினூன்
(மனிதர்களே! நம்) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்ட (வேதத்)தை மெய்யாகவே நம்பிக்கை கொள்கிறார். (அவ்வாறே மற்ற) நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொள்கின்றனர்.
-
كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ
குல்லுன் ஆமன பில்லாஹி வ மலாஇகதிஹீ வ குதுபிஹீ வ ருஸுலிஹ்
இவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர்.
-
لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ
லா நுஃபர்ரிகு பைன அஹதிம் மிர் ருஸுலிஹ்
தவிர, ‘‘அவனுடைய தூதர்களில் எவரையும் (தூதர் அல்ல என்று) நாங்கள் பிரித்து (நிராகரித்து)விட மாட்டோம்'' என்றும்,
-
وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ
வ காலூ ஸமிஃனா வ அதஃனா
‘‘(இறைவனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். (உன் கட்டளைக்கு) நாங்கள் கீழ்ப்படிந்தோம்.
-
غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ ٢٨٥
குஃப்ரானக ரப்பனா வ இலைகல் மஸீர்
எங்கள் இறைவனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடம்தான் நாங்கள் சேர வேண்டியதிருக்கிறது'' என்றும் கூறுகிறார்கள்.
-
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ
லா யுகல்லிஃபுல்லாஹு நஃப்ஸன் இல்லா வுஸ்அஹா
அல்லாஹ் ஓர் ஆத்மாவை அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை.
-
لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ
லஹா மா கஸபத் வ அலைஹா மக்தஸபத்
அவை தேடிக் கொண்ட நன்மை அவற்றுக்கே (பயனளிக்கும்). அவை தேடிக்கொண்ட தீமை அவற்றுக்கே (கேடு விளைவிக்கும்).
-
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ
ரப்பனா லா துஆகித்னா இன் நஸீனா அவ் அக்தஃனா
‘‘எங்கள் இறைவனே! நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்து விட்டாலும் அல்லது அதில் தவறிழைத்துவிட்டாலும் அதைப் பற்றி நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே!
-
رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ
ரப்பனா வ லா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்தஹூ அலல் லதீன மின் கப்லினா
எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது (கடினமான கட்டளைகளை விதித்து) பளுவான சுமையை சுமத்திவிடாதே. எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது (கடினமான கட்டளைகளை) நீ சுமத்தியவாறு (சுமத்தாதே!).
-
رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ
ரப்பனா வ லா துஹம்மில்னா மா லா தாகத லனா பிஹ்
எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க முடியாத சிரமங்களை எங்கள் மீது சுமத்திவிடாதே!
-
وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ
வஃஃபு அன்னா வக்ஃபிர் லனா வர்ஹம்னா
எங்கள் (குற்றங்களை) அழிப்பாயாக! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக!
-
أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ٢٨٦
அன்த மவ்லானா ஃபன்ஸுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்
நீதான் எங்கள் பாதுகாவலன்! ஆகவே, (உன்னை) நிராகரிக்கும் கூட்டங்கள் மீது (வெற்றிபெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!
குர்ஆன் 2:285-286 · அறிஞர்களின் நடைமுறைப்படி ருக்யாவில் ஓதப்படுகிறது; ருக்யாவுக்கென இதைக் குறிப்பிடும் அறிவிப்பு எதுவும் இல்லை.
ஸூரத்துல் இக்லாஸ்
உளத்தூய்மை (குர்ஆன் 112)
×3
நோயுற்றபோது நபி ﷺ அவர்கள் இவற்றை ஓதி, தம் கைகளில் லேசாக ஊதி, உடலைத் தடவிக்கொள்வார்கள்.
-
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
-
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ١
குல் ஹுவல்லாஹு அஹத்
(நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்.
-
اللَّهُ الصَّمَدُ ٢
அல்லாஹுஸ் ஸமத்
(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
-
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ٣
லம் யலித் வ லம் யூலத்
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.)
-
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ٤
வ லம் யகுல் லஹூ குஃபுவன் அஹத்
(தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை.
குர்ஆன் 112:1-4 · புகாரி 5016 · புகாரி 5748 · முஸ்லிம் 2192a · மூன்று முறை; நபி ﷺ அவர்கள் உறங்கும்போது இவ்வாறு செய்தார்கள் (புகாரி 5017); நோயுற்றபோது ஆயிஷா அவர்களைத் தமக்கு இவ்வாறு செய்யுமாறு கூறினார்கள் (புகாரி 5748); நோய் பற்றிய அறிவிப்புகளில் எண்ணிக்கை இல்லை.
ஸூரத்துல் ஃபலக்
அதிகாலை (குர்ஆன் 113)
×3
நோயுற்றபோது நபி ﷺ அவர்கள் இவற்றை ஓதி, தம் கைகளில் லேசாக ஊதி, உடலைத் தடவிக்கொள்வார்கள்.
-
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
-
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ١
குல் அஊது பி ரப்பில் ஃபலக்
(நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
-
مِن شَرِّ مَا خَلَقَ ٢
மின் ஷர்ரி மா கலக்
அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும்,
-
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ٣
வ மின் ஷர்ரி காஸிகின் இதா வகப்
(அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்,
-
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ٤
வ மின் ஷர்ரின் நஃப்பாஸாதி ஃபில் உகத்
முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,
-
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ٥
வ மின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்
பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
குர்ஆன் 113:1-5 · புகாரி 5016 · புகாரி 5748 · முஸ்லிம் 2192a · மூன்று முறை; நபி ﷺ அவர்கள் உறங்கும்போது இவ்வாறு செய்தார்கள் (புகாரி 5017); நோயுற்றபோது ஆயிஷா அவர்களைத் தமக்கு இவ்வாறு செய்யுமாறு கூறினார்கள் (புகாரி 5748); நோய் பற்றிய அறிவிப்புகளில் எண்ணிக்கை இல்லை.
ஸூரத்துந் நாஸ்
மனிதர்கள் (குர்ஆன் 114)
×3
நோயுற்றபோது நபி ﷺ அவர்கள் இவற்றை ஓதி, தம் கைகளில் லேசாக ஊதி, உடலைத் தடவிக்கொள்வார்கள்.
-
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
-
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ١
குல் அஊது பி ரப்பின் நாஸ்
(நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
-
مَلِكِ النَّاسِ ٢
மலிகின் நாஸ்
(அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்.
-
إِلَٰهِ النَّاسِ ٣
இலாஹின் நாஸ்
(அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்.
-
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ٤
மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ்
மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
-
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ٥
அல்லதீ யுவஸ்விஸு ஃபீ ஸுதூரின் நாஸ்
(4, 5 ஆகிய வசனங்கள் மேலே ஒன்றாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.)
-
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ٦
மினல் ஜின்னதி வன் நாஸ்
(அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.
குர்ஆன் 114:1-6 · புகாரி 5016 · புகாரி 5748 · முஸ்லிம் 2192a · மூன்று முறை; நபி ﷺ அவர்கள் உறங்கும்போது இவ்வாறு செய்தார்கள் (புகாரி 5017); நோயுற்றபோது ஆயிஷா அவர்களைத் தமக்கு இவ்வாறு செய்யுமாறு கூறினார்கள் (புகாரி 5748); நோய் பற்றிய அறிவிப்புகளில் எண்ணிக்கை இல்லை.
ஸூரத்துல் அஃராஃப் 117–122
மூஸாவும் சூனியக்காரர்களும் (குர்ஆன் 7:117–122)
-
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
-
وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ
வ அவ்ஹைனா இலா மூஸா அன் அல்கி அஸாக்
அதுசமயம் நாம் ‘‘மூஸாவே! நீர் உமது தடியை எறிவீராக'' என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம்.
-
فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ ١١٧
ஃப இதா ஹிய தல்கஃபு மா யஃஃபிகூன்
அவ்வாறு அவர் எறியவே (அது பெரியதொரு பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவையும் விழுங்கிவிட்டது.
-
فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ ١١٨
ஃப வகஅல் ஹக்கு வ பதல மா கானூ யஃமலூன்
இவ்வாறு அவர்கள் செய்த அனைத்தும் வீணாகி உண்மை உறுதியாயிற்று.
-
فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ ١١٩
ஃப குலிபூ ஹுனாலிக வன்கலபூ ஸாகிரீன்
ஆகவே, (கர்வம் கொண்டிருந்த) அவர்கள், அங்கு தோல்வியுற்று சிறுமைப்பட்ட வர்களாக மாறினார்கள்.
-
وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ ١٢٠
வ உல்கியஸ் ஸஹரது ஸாஜிதீன்
அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்து விழுந்தனர்,
-
قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ ١٢١
காலூ ஆமன்னா பி ரப்பில் ஆலமீன்
‘‘அகிலத்தார் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்வையே நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு விட்டோம்'' என்று கூறினார்கள்.
-
رَبِّ مُوسَىٰ وَهَارُونَ ١٢٢
ரப்பி மூஸா வ ஹாரூன்
மூஸா, ஹாரூனுடைய இறைவனை நாங்களும் (நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்கள்.)
குர்ஆன் 7:117-122 · அறிஞர்களின் நடைமுறைப்படி (உதாரணமாக இப்னு பாஸ்) ருக்யாவில் ஓதப்படுகிறது; ருக்யாவுக்கென இதைக் குறிப்பிடும் அறிவிப்பு எதுவும் இல்லை.
ஸூரத்து யூனுஸ் 79–82
மூஸாவும் சூனியக்காரர்களும் (குர்ஆன் 10:79–82)
-
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
-
وَقَالَ فِرْعَوْنُ ائْتُونِي بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ ٧٩
வ கால ஃபிர்அவ்னுஃதூனீ பி குல்லி ஸாஹிரின் அலீம்
பின்னர், ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி) ‘‘சூனியத்தில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்'' என்று கட்டளையிட்டான்.
-
فَلَمَّا جَاءَ السَّحَرَةُ
ஃப லம்மா ஜாஅஸ் ஸஹரஹ்
(பல இடங்களிலுமுள்ள) சூனியக்காரர்கள் (குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திற்கு) வந்து சேரவே,
-
قَالَ لَهُم مُّوسَىٰ أَلْقُوا مَا أَنتُم مُّلْقُونَ ٨٠
கால லஹும் மூஸா அல்கூ மா அன்தும் முல்கூன்
மூஸா அவர்களை நோக்கி ‘‘நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறி(ந்து உங்கள் சூனியத்தைச் செய்)யுங்கள்'' என்று கூறினார்.
-
فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ
ஃப லம்மா அல்கவ் கால மூஸா மா ஜிஃதும் பிஹிஸ் ஸிஹ்ர்
(அவ்வாறு) அவர்கள் எறி(ந்து சூனியம் செய்)யவே, மூஸா (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் செய்தவை அனைத்தும் (வெறும்) சூனியம்தான்.
-
إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ
இன்னல்லாஹ ஸ யுப்திலுஹ்
அதிசீக்கிரத்தில் நிச்சயமாக அல்லாஹ் இவற்றை அழித்து விடுவான்.
-
إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ ٨١
இன்னல்லாஹ லா யுஸ்லிஹு அமலல் முஃப்ஸிதீன்
நிச்சயமாக அல்லாஹ் (சூனியம் செய்து) விஷமம் செய்பவர்களின் செயலை சீர்படச் செய்வதில்லை.
-
وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ ٨٢
வ யுஹிக்குல்லாஹுல் ஹக்க பி கலிமாதிஹீ வ லவ் கரிஹல் முஜ்ரிமூன்
‘‘நிச்சயமாக, அல்லாஹ் தன் அத்தாட்சிகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான். (அதைக்) குற்றவாளிகள் வெறுத்தபோதிலும் சரியே'' என்று கூறினார். (அவர் கூறியவாறே அவர்கள் செய்த சூனியங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான்.)
குர்ஆன் 10:79-82 · அறிஞர்களின் நடைமுறைப்படி (உதாரணமாக இப்னு பாஸ்) ருக்யாவில் ஓதப்படுகிறது; ருக்யாவுக்கென இதைக் குறிப்பிடும் அறிவிப்பு எதுவும் இல்லை.
ஸூரத்து தாஹா 65–69
மூஸாவும் சூனியக்காரர்களும் (குர்ஆன் 20:65–69)
-
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
-
قَالُوا يَا مُوسَىٰ إِمَّا أَن تُلْقِيَ
காலூ யா மூஸா இம்மா அன் துல்கீ
பின்னர் (சூனியம் செய்ய வந்த) அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! (சூனியத்தை) நீர் எறிகிறீரா?
-
وَإِمَّا أَن نَّكُونَ أَوَّلَ مَنْ أَلْقَىٰ ٦٥
வ இம்மா அன் நகூன அவ்வல மன் அல்கா
அல்லது முதலாவதாக நாங்கள் எறியவா?'' என்று கேட்டார்கள்.
-
قَالَ بَلْ أَلْقُوا ۖ
கால பல் அல்கூ
அதற்கவர், ‘‘இல்லை! நீங்களே (முதலாவதாக) எறியுங்கள்'' என்று கூறினார்.
-
فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِن سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَىٰ ٦٦
ஃப இதா ஹிபாலுஹும் வ இஸிய்யுஹும் யுகய்யலு இலைஹி மின் ஸிஹ்ரிஹிம் அன்னஹா தஸ்ஆ
(அவர்கள் எறியவே, எறியப்பட்ட) அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக மெய்யாகவே அவை (பாம்புகளாகி) ஓடுவதுபோல் இவருக்குத் தோன்றின.
-
فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُّوسَىٰ ٦٧
ஃப அவ்ஜஸ ஃபீ நஃப்ஸிஹீ கீஃபதம் மூஸா
ஆகவே, மூஸா தன் மனதில் பயத்தை உணர்ந்தார்.
-
قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنتَ الْأَعْلَىٰ ٦٨
குல்னா லா தகஃப் இன்னக அன்தல் அஃலா
(அச்சமயம் நாம் அவரை நோக்கி) ‘‘பயப்படாதீர்! நிச்சயமாக நீர்தான் (இவர்களைவிட) மிக உயர்ந்தவர்'' என்று கூறினோம்.
-
وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ
வ அல்கி மா ஃபீ யமீனிக தல்கஃப் மா ஸனஊ
இன்னும் உமது வலது கையில் இருப்பதை நீர் எறிவீராக! அவர்கள் செய்த (சூனியங்கள்) அனைத்தையும் அது விழுங்கிவிடும்.
-
إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ
இன்னமா ஸனஊ கைது ஸாஹிர்
அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரர்களின் (வெறும்) சூழ்ச்சியே (தவிர உண்மையல்ல).
-
وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ ٦٩
வ லா யுஃப்லிஹுஸ் ஸாஹிரு ஹைஸு அதா
சூனியக்காரன் எங்கிருந்து வந்தபோதிலும் வெற்றி பெறவே மாட்டான்'' (என்றும் கூறினோம்).
குர்ஆன் 20:65-69 · அறிஞர்களின் நடைமுறைப்படி (உதாரணமாக இப்னு பாஸ்) ருக்யாவில் ஓதப்படுகிறது; ருக்யாவுக்கென இதைக் குறிப்பிடும் அறிவிப்பு எதுவும் இல்லை.
அத்ஹிபில் பாஸ், ரப்பன் நாஸ்
மனிதர்களின் இறைவனிடம் நிவாரணம் கேட்டல்
நபி ﷺ அவர்கள் செய்தது போல், வலிக்கும் இடத்தை வலது கையால் தடவுங்கள்.
-
أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ
அத்ஹிபில் பாஸ ரப்பன் நாஸ்
மனிதர்களின் இறைவனே! துன்பத்தைப் போக்குவாயாக,
-
وَاشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ
வஷ்ஃபி அன்தஷ் ஷாஃபீ, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்
நிவாரணம் அளிப்பாயாக; நீயே நிவாரணம் அளிப்பவன், உனது நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை,
-
شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
ஷிஃபாஅன் லா யுகாதிரு ஸகமா
எந்த நோயையும் விட்டுவைக்காத நிவாரணம்.
புகாரி 5750 · முஸ்லிம் 2191a
பிஸ்மில்லாஹ்
வலிக்கும் இடத்தில் கையை வைத்து
×3
வலிக்கும் இடத்தில் உங்கள் கையை வையுங்கள்; பின்னர் அடுத்ததை ஏழு முறை.
-
بِسْمِ اللَّهِ
பிஸ்மில்லாஹ்
அல்லாஹ்வின் பெயரால்.
முஸ்லிம் 2202 · ஹிஸ்னுல் முஸ்லிம் 243
அஊது பில்லாஹி வ குத்ரதிஹ்
உணரும் வலியிலிருந்து பாதுகாப்பு
×7
உஸ்மான் இப்னு அபில் ஆஸ் அவர்கள் இவ்வாறு செய்தார்கள்; அல்லாஹ் அவர்களின் வலியைப் போக்கினான்.
-
أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ
அஊது பில்லாஹி வ குத்ரதிஹ்
அல்லாஹ்விடமும் அவனது வல்லமையிடமும் பாதுகாப்புத் தேடுகிறேன்
-
مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிர்
நான் உணர்வதன் தீமையையும் நான் அஞ்சுவதன் தீமையையும் விட்டும்.
முஸ்லிம் 2202 · ஹிஸ்னுல் முஸ்லிம் 243 · சிறப்பு: அபூதாவூத் 3891 (ஸஹீஹ், அல்பானீ)
அஊது பி கலிமாதில்லாஹித் தாம்மஹ்
ஒவ்வொரு ஷைத்தான், விஷ ஜந்து, கண்ணேறு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு
இவற்றைக் கொண்டு நபி ﷺ அவர்கள் ஹசன், ஹுசைன் இருவருக்காகவும் பாதுகாப்புத் தேடினார்கள்.
-
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ
அஊது பி கலிமாதில்லாஹித் தாம்மஹ்
அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகளைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்
-
مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ
மின் குல்லி ஷைதானிவ் வ ஹாம்மஹ்
ஒவ்வொரு ஷைத்தானை விட்டும், ஒவ்வொரு விஷ ஜந்துவை விட்டும்,
-
وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
வ மின் குல்லி ஐனில் லாம்மஹ்
தீங்கிழைக்கும் ஒவ்வொரு கண்ணை விட்டும்.
புகாரி 3371 · ஹிஸ்னுல் முஸ்லிம் 146
பிஸ்மில்லாஹி அர்கீக்
ஜிப்ரீலின் ருக்யா, பிறர் மீது ஓதப்படுவது
நபி ﷺ அவர்கள் நோயுற்றபோது ஜிப்ரீல் அவர்கள் மீது இதை ஓதினார்கள்.
-
بِسْمِ اللَّهِ أَرْقِيكَ
பிஸ்மில்லாஹி அர்கீக்
அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ருக்யா செய்கிறேன்,
-
مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ
மின் குல்லி ஷைஇன் யுஃதீக்
உமக்குத் தொல்லை தரும் ஒவ்வொன்றை விட்டும்,
-
مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ
மின் ஷர்ரி குல்லி நஃப்ஸின் அவ் ஐனி ஹாஸித்
ஒவ்வொரு ஆன்மாவின் தீமையை விட்டும், அல்லது பொறாமைக்காரனின் கண்ணை விட்டும்.
-
اللَّهُ يَشْفِيكَ
அல்லாஹு யஷ்ஃபீக்
அல்லாஹ் உமக்கு நிவாரணம் அளிப்பானாக.
-
بِسْمِ اللَّهِ أَرْقِيكَ
பிஸ்மில்லாஹி அர்கீக்
அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ருக்யா செய்கிறேன்.
முஸ்லிம் 2186 · பிறர் மீது ஓதப்படுகிறது; பெண்ணின் மீது: அர்கீகி, யுஃதீகி, யஷ்ஃபீகி.
அஸ்அலுல்லாஹல் அளீம்
நோயாளிக்கு நிவாரணம் அளிக்க அல்லாஹ்விடம் கேட்டல்
×7
நோயாளியை நலம் விசாரிக்கச் செல்பவர் இதை ஏழு முறை கூறினால், அவரது தவணை வராதிருந்தால் அல்லாஹ் அவருக்கு நிவாரணம் அளிப்பான்.
-
أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ
அஸ்அலுல்லாஹல் அளீம்
மகத்தான அல்லாஹ்விடம் கேட்கிறேன்,
-
رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ
ரப்பல் அர்ஷில் அளீமி அன் யஷ்ஃபியக்
மகத்தான அர்ஷின் இறைவனான அவன் உமக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று.
அபூதாவூத் 3106 (ஸஹீஹ், அல்பானீ) · திர்மிதி 2083 (ஸஹீஹ், தாருஸ்ஸலாம்) · ஹிஸ்னுல் முஸ்லிம் 148 · நோயாளியிடம் கூறப்படுகிறது; பெண்ணிடம்: அன் யஷ்ஃபியகி.