நபி ﷺ அவர்கள் பயணம் புறப்படும்போது இதைக் கூறுவார்கள்.
-
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَٰذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ
ஸுப்ஹானல் லதீ ஸக்கர லனா ஹாதா வ மா குன்னா லஹூ முக்ரினீன்
இதை வசப்படுத்த நாங்கள் சக்தியற்றவர்களாக இருந்தபோது, இதை எங்களுக்கு வசப்படுத்தித் தந்தவன் தூயவன்,
-
وَإِنَّا إِلَىٰ رَبِّنَا لَمُنْقَلِبُونَ
வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன்
நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோம்.
-
اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَٰذَا الْبِرَّ وَالتَّقْوَىٰ
அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக ஃபீ ஸஃபரினா ஹாதல் பிர்ர வத் தக்வா
அல்லாஹ்வே! எங்களின் இந்தப் பயணத்தில் நல்லறத்தையும் இறையச்சத்தையும் உன்னிடம் கேட்கிறோம்,
-
وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَىٰ
வ மினல் அமலி மா தர்ளா
நீ பொருந்திக்கொள்ளும் செயல்களையும் கேட்கிறோம்.
-
اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَٰذَا، وَاطْوِ عَنَّا بُعْدَهُ
அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸஃபரனா ஹாதா, வத்வி அன்னா புஃதஹ்
அல்லாஹ்வே! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்குவாயாக, அதன் தூரத்தை எங்களுக்குச் சுருக்குவாயாக.
-
اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ
அல்லாஹும்ம அன்தஸ் ஸாஹிபு ஃபிஸ் ஸஃபர், வல் கலீஃபது ஃபில் அஹ்ல்
அல்லாஹ்வே! நீயே பயணத்தில் தோழன், குடும்பத்தைக் கவனித்துக்கொள்பவன்.
-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمَنْظَرِ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் வஃஸாஇஸ் ஸஃபர், வ கஆபதில் மன்ளர்
அல்லாஹ்வே! பயணத்தின் சிரமத்தை விட்டும், துயரம் தரும் எந்தக் காட்சியை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்,
-
وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ
வ ஸூஇல் முன்கலபி ஃபில் மாலி வல் அஹ்ல்
செல்வத்திலும் குடும்பத்திலும் தீங்கைக் காணும் நிலையில் திரும்புவதை விட்டும்.