ஸூரத்துல் முல்க்
ஆட்சி (குர்ஆன் 67)
முப்பது வசனங்கள் ஒரு மனிதருக்காக, அவர் மன்னிக்கப்படும் வரை பரிந்துரைத்தன.
-
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
-
تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ١
தபாரகல் லதீ பி யதிஹில் முல்கு வ ஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்
(மனிதர்களே! வானம் பூமி உடைய) ஆட்சி எல்லாம் எவன் கையில் இருக்கிறதோ அவன் மிக பாக்கியமுடையவன். (வானம் பூமிகளை அழிக்கவும், ஆக்கவும்) அவன் (விரும்பியவாறு அவற்றைச் செய்ய) அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்.
-
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ
அல்லதீ கலகல் மவ்த வல் ஹயாத லி யப்லுவகும் அய்யுகும் அஹ்ஸனு அமலா
உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கிறான்.
-
وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ ٢
வ ஹுவல் அஸீஸுல் கஃபூர்
அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன் ஆவான்.
-
الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا ۖ
அல்லதீ கலக ஸப்அ ஸமாவாதின் திபாகா
அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தவன்.
-
مَّا تَرَىٰ فِي خَلْقِ الرَّحْمَٰنِ مِن تَفَاوُتٍ ۖ
மா தரா ஃபீ கல்கிர் ரஹ்மானி மின் தஃபாவுத்
(மனிதனே!) அந்த ரஹ்மானுடைய படைப்பில் நீ ஒரு ஒழுங்கீனத்தையும் காணமாட்டாய்.
-
فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍ ٣
ஃபர்ஜிஇல் பஸர ஹல் தரா மின் ஃபுதூர்
மற்றொரு முறை (அதைக் கவனித்துப்)பார். அதில் ஒரு பிளவை நீ காண்கிறாயா?
-
ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ
ஸும்மர்ஜிஇல் பஸர கர்ரதைன்
(பின்னும்) மேலும் இரு முறைப் பார்!
-
يَنقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ ٤
யன்கலிப் இலைகல் பஸரு காஸிஅவ் வ ஹுவ ஹஸீர்
(இவ்வாறு நீ எத்தனை முறை துருவித் துருவிப் பார்த்த போதிலும் ஒரு குறையையும் காண முடியாது.) உன் பார்வைதான் அலுத்து, கேவலமுற்று உன்னிடம் திரும்பிவிடும்.
-
وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ
வ லகத் ஸய்யன்னஸ் ஸமாஅத் துன்யா பி மஸாபீஹ்
நிச்சயமாக நாம், சமீபமாக உள்ள வானத்தை (பூமியிலுள்ளவர்களுக்கு நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்தோம்.
-
وَجَعَلْنَاهَا رُجُومًا لِّلشَّيَاطِينِ ۖ
வ ஜஅல்னாஹா ருஜூமல் லிஷ் ஷயாதீன்
மேலும், அவற்றை ஷைத்தான்களுக்கு ஓர் எறிகல்லாகவும் அமைத்தோம்.
-
وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ ٥
வ அஃதத்னா லஹும் அதாபஸ் ஸஈர்
இன்னும் அவர்களுக்கு நரக வேதனையையும் நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
-
وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ الْمَصِيرُ ٦
வ லில் லதீன கஃபரூ பி ரப்பிஹிம் அதாபு ஜஹன்னம், வ பிஃஸல் மஸீர்
இன்னும் எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு நரக வேதனையுண்டு. அது மகாகெட்ட செல்லுமிடமாகும்.
-
إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ ٧
இதா உல்கூ ஃபீஹா ஸமிஊ லஹா ஷஹீகவ் வ ஹிய தஃபூர்
அதில் அவர்கள் (தூக்கி) எறியப்படும்பொழுது (கழுதையின் பெரிய சப்தத்தைப் போல்) அதன் கொதி சப்தத்தைக் கேட்பார்கள்.
-
تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ ۖ
தகாது தமய்யஸு மினல் கைள்
அது கோபத்தால் வெடித்து விடுவதைப்போல் குமுறிக் கொண்டிருக்கும்.
-
كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ ٨
குல்லமா உல்கிய ஃபீஹா ஃபவ்ஜுன் ஸஅலஹும் கஸனதுஹா அலம் யஃதிகும் நதீர்
அதில் ஒரு கூட்டத்தினர் எறியப்படும் பொழுதெல்லாம், அதன் காவலாளர் அவர்களை நோக்கி (‘‘இவ்வேதனையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் உங்களிடம் வரவில்லையா'' என்று கேட்பார்கள்.
-
قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا
காலூ பலா கத் ஜாஅனா நதீருன் ஃப கத்தப்னா
அதற்கவர்கள் ‘‘மெய்தான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் நிச்சயமாக எங்களிடம் வந்தார். எனினும், நாங்கள் (அவரைப்) பொய்யாக்கி,
-
وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ
வ குல்னா மா நஸ்ஸலல்லாஹு மின் ஷைஃ
அல்லாஹ் (உங்கள் மீது) எதையும் இறக்கிவைக்கவே இல்லை.
-
إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ ٩
இன் அன்தும் இல்லா ஃபீ ளலாலின் கபீர்
நீங்கள் பெரும் வழிகேட்டிலே தவிர இருக்கவில்லை என்று (அவர்களை நோக்கி) நாங்கள் கூறினோம்'' என்று கூறுவார்கள்.
-
وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ ١٠
வ காலூ லவ் குன்னா நஸ்மஉ அவ் நஃகிலு மா குன்னா ஃபீ அஸ்ஹாபிஸ் ஸஈர்
இன்னும் ‘‘(அத்தூதர்களின் வார்த்தைகளுக்கு) நாங்கள் செவிசாய்த்து அவற்றை நாங்கள் சிந்தித்திருந்தால், நாங்கள் நரகவாசிகளில் ஆகியிருக்கவே மாட்டோம்'' என்று கூறுவார்கள்.
-
فَاعْتَرَفُوا بِذَنبِهِمْ فَسُحْقًا لِّأَصْحَابِ السَّعِيرِ ١١
ஃபஃதரஃபூ பி தன்பிஹிம் ஃப ஸுஹ்கல் லி அஸ்ஹாபிஸ் ஸஈர்
மேலும் தங்கள் பாவத்தை ஒப்புக் கொள்வார்கள். ஆகவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.
-
إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ
இன்னல் லதீன யக்ஷவ்ன ரப்பஹும் பில் கைப்
நிச்சயமாக எவர்கள் மறைவான சமயத்திலும், தங்கள் இறைவனுக்குப் பயப்படுகிறார்களோ
-
لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ ١٢
லஹும் மக்ஃபிரதுவ் வ அஜ்ருன் கபீர்
அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு.
-
وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ ۖ
வ அஸிர்ரூ கவ்லகும் அவிஜ்ஹரூ பிஹ்
(மனிதர்களே!) நீங்கள் உங்கள் வார்த்தைகளை இரகசியமாகக் கூறுங்கள் அல்லது பகிரங்கமாகவே கூறுங்கள்.
-
إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ ١٣
இன்னஹூ அலீமும் பி தாதிஸ் ஸுதூர்
(எவ்விதம் கூறியபோதிலும், இறைவன் அதை நன்கறிவான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன், உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிபவன் ஆவான்.
-
أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ ١٤
அலா யஃலமு மன் கலக், வ ஹுவல் லதீஃபுல் கபீர்
(அனைவரையும்) படைத்தவன் (அவற்றில் உள்ளவற்றை) அறிய மாட்டானா? அவனோ அருளுடையவனும் (அனைத்தையும்) வெகு நுட்பமாக அறிந்தவனும் ஆவான்.
-
هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا
ஹுவல் லதீ ஜஅல லகுமுல் அர்ள தலூலா
அவன்தான் உங்களுக்குப் பூமியை (நீங்கள் வசிப்பதற்கு) வசதியாக ஆக்கி வைத்தான்.
-
فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِن رِّزْقِهِ ۖ
ஃபம்ஷூ ஃபீ மனாகிபிஹா வ குலூ மிர் ரிஸ்கிஹ்
ஆகவே, அதன் பல கோணங்களிலும் சென்று, அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவற்றைப் புசித்துக் கொண்டிருங்கள்.
-
وَإِلَيْهِ النُّشُورُ ١٥
வ இலைஹின் நுஷூர்
(மறுமையில்) அவனிடமே (அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது.
-
أَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ
அஅமின்தும் மன் ஃபிஸ் ஸமாஃ
வானத்தில் இருப்பவன்,
-
أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ ١٦
ஐ யக்ஸிஃப பிகுமுல் அர்ள ஃப இதா ஹிய தமூர்
உங்களைப் பூமியில் சொருகிவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்றிருக்கிறீர்களா? அந்நேரத்தில் பூமி அதிர்ந்து நடு நடுங்(கிக்) கு(முறு)ம்.
-
أَمْ أَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ۖ
அம் அமின்தும் மன் ஃபிஸ் ஸமாஇ ஐ யுர்ஸில அலைகும் ஹாஸிபா
அல்லது வானத்திலிருப்பவன், உங்கள் மீது கல்மழையை பொழிய மாட்டான் என்று நீங்கள் பயமற்றிருக்கிறீர்களா?
-
فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ ١٧
ஃப ஸதஃலமூன கைஃப நதீர்
அவ்வாறாயின், எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எவ்வாறிருக்கும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
-
وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ ١٨
வ லகத் கத்தபல் லதீன மின் கப்லிஹிம் ஃப கைஃப கான நகீர்
இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி (நிராகரித்து)க் கொண்டிருந்தனர். ஆகவே (அவர்களுக்கு) எனது கண்டிப்பு எவ்வாறு இருத்தது என்பதை (நபியே! கவனித்தீரா)?
-
أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ ۚ
அவ லம் யரவ் இலத் தைரி ஃபவ்கஹும் ஸாஃப்பாதிவ் வ யக்பிள்ன்
இறக்கைகளை விரித்துக்கொண்டும், மடக்கிக்கொண்டும் இவர்களுக்கு மேல் ஆகாயத்தில் (அணி) அணியாகச் செல்லும் பறவைகளை இவர்கள் கவனிக்கவில்லையா?
-
مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَٰنُ ۚ
மா யும்ஸிகுஹுன்ன இல்லர் ரஹ்மான்
ரஹ்மானைத் தவிர, (மற்றெவரும்) அவற்றை (ஆகாயத்தில் தூக்கி)ப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை!
-
إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ ١٩
இன்னஹூ பி குல்லி ஷைஇன் பஸீர்
நிச்சயமாக அவன் அனைத்தையும் உற்று நோக்குபவன் ஆவான்.
-
أَمَّنْ هَٰذَا الَّذِي هُوَ جُندٌ لَّكُمْ يَنصُرُكُم مِّن دُونِ الرَّحْمَٰنِ ۚ
அம்மன் ஹாதல் லதீ ஹுவ ஜுன்துல் லகும் யன்ஸுருகும் மின் தூனிர் ரஹ்மான்
ரஹ்மானையன்றி உங்களுக்கு உதவி செய்யக்கூடிய படைகள் எவை?
-
إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ ٢٠
இனில் காஃபிரூன இல்லா ஃபீ குரூர்
இந்நிராகரிப்பவர்கள் வெறும் மாயையிலே தவிர வேறில்லை.
-
أَمَّنْ هَٰذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ ۚ
அம்மன் ஹாதல் லதீ யர்ஸுகுகும் இன் அம்ஸக ரிஸ்கஹ்
அல்லாஹ் (உங்களுக்களிக்கும்) தன் உணவைத் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவு கொடுப்பவன் யார்? (இதையும் இவர்கள் கவனிப்பதில்லை.)
-
بَل لَّجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ ٢١
பல் லஜ்ஜூ ஃபீ உதுவ்விவ் வ நுஃபூர்
மாறாக, இவர்கள் வழிகேட்டிலும், (சத்தியத்தை) வெறுப்பதிலுமே மூழ்கிக் கிடக்கின்றனர்.
-
أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَىٰ وَجْهِهِ أَهْدَىٰ
அஃபமை யம்ஷீ முகிப்பன் அலா வஜ்ஹிஹீ அஹ்தா
என்னே! முகங்குப்புற விழுந்து செல்பவன் தன் லட்சியத்தை அடைவானா?
-
أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ ٢٢
அம்மை யம்ஷீ ஸவிய்யன் அலா ஸிராதிம் முஸ்தகீம்
அல்லது நேரான பாதையில் ஒழுங்காகச் செல்பவன் அடைவானா?
-
قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ
குல் ஹுவல் லதீ அன்ஷஅகும்
(நபியே!) கூறுவீராக: அவன்தான் உங்களைப் படைத்து
-
وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۖ
வ ஜஅல லகுமுஸ் ஸம்அ வல் அப்ஸார வல் அஃப்இதஹ்
உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், உள்ளங்களையும் கொடுத்தவன்.
-
قَلِيلًا مَّا تَشْكُرُونَ ٢٣
கலீலம் மா தஷ்குரூன்
(அவ்வாறிருந்தும்) நீங்கள் வெகு சொற்பமாகவே (அவனுக்கு) நன்றி செலுத்துகிறீர்கள்.
-
قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ ٢٤
குல் ஹுவல் லதீ தரஅகும் ஃபில் அர்ளி வ இலைஹி துஹ்ஷரூன்
(நபியே!) கூறுவீராக: அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருக்கிறான். (மறுமையில்) அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
-
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ ٢٥
வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
(இவ்வாறிருந்தும் அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (மறுமையைப் பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (வரும்?)'' என்று கேட்கிறார்கள்.
-
قُلْ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُّبِينٌ ٢٦
குல் இன்னமல் இல்மு இன்தல்லாஹி வ இன்னமா அன நதீரும் முபீன்
அதற்கு (நபியே!) கூறுவீராக: (‘‘அது எப்போது வரும் என்ற) ஞானம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது. நான் (அதைப் பற்றிப்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்.
-
فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا
ஃப லம்மா ரஅவ்ஹு ஸுல்ஃபதன் ஸீஅத் வுஜூஹுல் லதீன கஃபரூ
(நீர் அச்சமூட்டிய) வேதனை (இவர்களை) நோக்கி வருவதை அவர்கள் கண்டால், அந்நிராகரிப்பவர்களுடைய முகங்கள் கருகிவிடும்.
-
وَقِيلَ هَٰذَا الَّذِي كُنتُم بِهِ تَدَّعُونَ ٢٧
வ கீல ஹாதல் லதீ குன்தும் பிஹீ தத்தஊன்
(இன்னும், அவர்களை நோக்கி) ‘‘(எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தது இதுதான்'' என்றும் கூறப்படும்.
-
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِيَ اللَّهُ وَمَن مَّعِيَ أَوْ رَحِمَنَا
குல் அரஐதும் இன் அஹ்லகனியல்லாஹு வ மம் மஇய அவ் ரஹிமனா
(நபியே!) கூறுவீராக: என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் விரும்புகிறபடி) அல்லாஹ் அழித்து விட்டாலும் அல்லது அவன் எங்களுக்கு அருள் புரிந்தாலும் (அது எங்கள் விஷயம். ஆயினும்,)
-
فَمَن يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ ٢٨
ஃப மை யுஜீருல் காஃபிரீன மின் அதாபின் அலீம்
துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிக்கும் உங்களை பாதுகாப்பவர் யார் என்பதை(க் கவனித்து)ப் பார்த்தீர்களா?
-
قُلْ هُوَ الرَّحْمَٰنُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا ۖ
குல் ஹுவர் ரஹ்மானு ஆமன்னா பிஹீ வ அலைஹி தவக்கல்னா
(நபியே!) கூறுவீராக: ‘‘அவன்தான் ரஹ்மான். அவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அவனையே நாங்கள் நம்பியும் இருக்கிறோம்.
-
فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُّبِينٍ ٢٩
ஃப ஸதஃலமூன மன் ஹுவ ஃபீ ளலாலிம் முபீன்
ஆகவே, பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள் யாரென்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.''
-
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا
குல் அரஐதும் இன் அஸ்பஹ மாஉகும் கவ்ரா
(நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் குடிக்கும்) தண்ணீர் பூமிக்குள் வெகு ஆழத்தில் சென்றுவிட்டால்,
-
فَمَن يَأْتِيكُم بِمَاءٍ مَّعِينٍ ٣٠
ஃப மை யஃதீகும் பி மாஇம் மஈன்
பிறகு தண்ணீரின் (வேறொரு) ஊற்றை உங்களுக்குக் கொண்டு வருபவன் யாரென்று கவனித்தீர்களா?
குர்ஆன் 67:1-30 · சிறப்பு: திர்மிதி 2891 (ஹஸன், அல்பானீ), அபூதாவூத் 1400 (ஹஸன், அல்பானீ) · முப்பது வசனங்கள் ஒரு மனிதருக்காக, அவர் மன்னிக்கப்படும் வரை பரிந்துரைத்தன (திர்மிதி 2891). அஸ்ஸஜ்தா, தபாரக் ஆகிய அத்தியாயங்களை ஓதாமல் நபி ﷺ அவர்கள் உறங்க மாட்டார்கள் என்பது திர்மிதி 2892-இல் உள்ளது; அது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது (ஸஹீஹ், அல்பானீ; ளயீஃப், தாருஸ்ஸலாம்).