தமிழ்
செயலியைத் திற

காலை, மாலை திக்ருகள்: முழு உரையும் ஆதாரங்களும்

காலை மாலை திக்ருகள் மற்றும் துஆக்கள், சிறு சிறு வாக்கியங்களாக: அரபு, தமிழில் உச்சரிப்பு, பொருள், துல்லிய ஆதாரம். இலவசம், ஆஃப்லைன், கணக்கு தேவையில்லை.

குர்ஆன்

ஸூரத்துல் ஃபாத்திஹா

தோற்றுவாய் (குர்ஆன் 1)

குர்ஆனின் மிக மகத்தான அத்தியாயம்.

  1. أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

    அஊது பில்லாஹிஸ் ஸமீஇல் அலீமி மினஷ் ஷைதானிர் ரஜீம்

    எல்லாவற்றையும் கேட்பவனும், எல்லாவற்றையும் அறிந்தவனுமான அல்லாஹ்விடம், விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.

  2. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ١

    பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)

  3. الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ٢

    அல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

    எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன்.

  4. الرَّحْمَٰنِ الرَّحِيمِ ٣

    அர் ரஹ்மானிர் ரஹீம்

    (அவன்தான்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்,

  5. مَالِكِ يَوْمِ الدِّينِ ٤

    மாலிகி யவ்மித் தீன்

    தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே).

  6. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ٥

    இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தஈன்

    (அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.

  7. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ٦

    இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம்

    நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!

  8. صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ

    ஸிராதல் லதீன அன்அம்த அலைஹிம்

    (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி.

  9. غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ٧

    கைரில் மக்ளூபி அலைஹிம் வ லள் ளால்லீன்

    (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.

குர்ஆன் 1:1-7 · சிறப்பு: புகாரி 4474 · இதன் சிறப்புக்காக ஓதப்படுகிறது; குறிப்பிட்ட ஹதீஸ் எதுவும் இதைக் காலை அல்லது மாலையுடன் இணைக்கவில்லை.

ஸூரத்துல் பகரா 1–5

பசு மாடு, வசனங்கள் 1–5 (குர்ஆன் 2)

  1. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

    பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)

  2. الم ١

    அலிஃப் லாம் மீம்

    அலிஃப் லாம் மீம்.

  3. ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ ٢

    தாலிகல் கிதாபு லா ரைப ஃபீஹ், ஹுதல் லில் முத்தகீன்

    இதுதான் வேதநூல். இதில் சந்தேகமேயில்லை. இறையச்சம் உடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும்.

  4. الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ

    அல்லதீன யுஃமினூன பில் கைபி வ யுகீமூனஸ் ஸலாஹ்

    அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்).

  5. وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ ٣

    வ மிம்மா ரஸக்னாஹும் யுன்ஃபிகூன்

    நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.

  6. وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ

    வல்லதீன யுஃமினூன பிமா உன்ஸில இலைக வ மா உன்ஸில மின் கப்லிக்

    மேலும், (நபியே!) அவர்கள் உமக்கு இறக்கப்பட்ட இ(வ்வேதத்)தையும், உமக்கு முன் (சென்ற நபிமார்களுக்கு) இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நம்பிக்கை கொள்வார்கள்.

  7. وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ ٤

    வ பில் ஆகிரதி ஹும் யூகினூன்

    (நியாயத் தீர்ப்பு நாளாகிய) இறுதி நாளையும் (உண்மை என்று) உறுதியாக நம்புவார்கள்.

  8. أُولَٰئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ ۖ

    உலாஇக அலா ஹுதம் மிர் ரப்பிஹிம்

    இவர்கள்தான் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருக்கிறார்கள்.

  9. وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ ٥

    வ உலாஇக ஹுமுல் முஃப்லிஹூன்

    இவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெற்றவர்கள்.

குர்ஆன் 2:1-5 · குறிப்பிட்ட ஹதீஸ் எதுவும் இதைக் காலை அல்லது மாலையுடன் இணைக்கவில்லை.

ஆயத்துல் குர்ஸீ

குர்ஸீ பற்றிய வசனம் (குர்ஆன் 2:255)

மாலை வரை ஜின்களிடமிருந்து பாதுகாக்கப்படுவார்.

  1. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

    பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)

  2. اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ

    அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்

    அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் இல்லவே இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்;

  3. لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ

    லா தஃகுதுஹூ ஸினதுவ் வ லா நவ்ம்

    அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது.

  4. لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ

    லஹூ மா ஃபிஸ் ஸமாவாதி வ மா ஃபில் அர்ள்

    வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே.

  5. مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ

    மன் தல் லதீ யஷ்ஃபஉ இன்தஹூ இல்லா பி இத்னிஹ்

    அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்?

  6. يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ

    யஃலமு மா பைன ஐதீஹிம் வ மா கல்ஃபஹும்

    அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான்.

  7. وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ

    வ லா யுஹீதூன பி ஷைஇம் மின் இல்மிஹீ இல்லா பிமா ஷாஃ

    அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து எதையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது.

  8. وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ

    வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல் அர்ள்

    அவனுடைய ‘‘குர்ஸி' வானங்கள், பூமியைவிட விசாலமாய் இருக்கிறது.

  9. وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ

    வ லா யஊதுஹூ ஹிஃப்ளுஹுமா

    அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமம் இல்லை.

  10. وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ ٢٥٥

    வ ஹுவல் அலிய்யுல் அளீம்

    மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன்.

மாலையில்:

காலை வரை ஜின்களிடமிருந்து பாதுகாக்கப்படுவார்.

குர்ஆன் 2:255 · ஹாகிம் 1/562 (ஸஹீஹ், அல்பானீ) · ஹிஸ்னுல் முஸ்லிம் 75 · அல்பானீ இதை ஸஹீஹ் என மதிப்பிட்டார் (ஸஹீஹுத் தர்ஙீப் 662); ஆனால் வேறோர் இடத்தில் காலை, மாலை பற்றிய வாசகத்தை ஷாத் (வழக்கத்திற்கு மாறான) கூடுதல் எனக் கருதினார் (அஸ்ஸஹீஹா 7/743).

ஸூரத்துல் இக்லாஸ்

உளத்தூய்மை (குர்ஆன் 112)

×3

இந்த மூன்று அத்தியாயங்களையும் காலையிலும் மாலையிலும் மும்முறை ஓதினால், அவை எல்லாவற்றிலிருந்தும் உமக்குப் போதுமானவை.

  1. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

    பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)

  2. قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ١

    குல் ஹுவல்லாஹு அஹத்

    (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்.

  3. اللَّهُ الصَّمَدُ ٢

    அல்லாஹுஸ் ஸமத்

    (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)

  4. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ٣

    லம் யலித் வ லம் யூலத்

    அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.)

  5. وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ٤

    வ லம் யகுல் லஹூ குஃபுவன் அஹத்

    (தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை.

குர்ஆன் 112:1-4 · அபூதாவூத் 5082 (ஹஸன், அல்பானீ) · திர்மிதி 3575 (ஹஸன், தாருஸ்ஸலாம்) · ஹிஸ்னுல் முஸ்லிம் 76

ஸூரத்துல் ஃபலக்

அதிகாலை (குர்ஆன் 113)

×3

இந்த மூன்று அத்தியாயங்களையும் காலையிலும் மாலையிலும் மும்முறை ஓதினால், அவை எல்லாவற்றிலிருந்தும் உமக்குப் போதுமானவை.

  1. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

    பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)

  2. قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ١

    குல் அஊது பி ரப்பில் ஃபலக்

    (நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.

  3. مِن شَرِّ مَا خَلَقَ ٢

    மின் ஷர்ரி மா கலக்

    அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும்,

  4. وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ٣

    வ மின் ஷர்ரி காஸிகின் இதா வகப்

    (அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்,

  5. وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ٤

    வ மின் ஷர்ரின் நஃப்பாஸாதி ஃபில் உகத்

    முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,

  6. وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ٥

    வ மின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்

    பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).

குர்ஆன் 113:1-5 · அபூதாவூத் 5082 (ஹஸன், அல்பானீ) · திர்மிதி 3575 (ஹஸன், தாருஸ்ஸலாம்) · ஹிஸ்னுல் முஸ்லிம் 76

ஸூரத்துந் நாஸ்

மனிதர்கள் (குர்ஆன் 114)

×3

இந்த மூன்று அத்தியாயங்களையும் காலையிலும் மாலையிலும் மும்முறை ஓதினால், அவை எல்லாவற்றிலிருந்தும் உமக்குப் போதுமானவை.

  1. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

    பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)

  2. قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ١

    குல் அஊது பி ரப்பின் நாஸ்

    (நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.

  3. مَلِكِ النَّاسِ ٢

    மலிகின் நாஸ்

    (அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்.

  4. إِلَٰهِ النَّاسِ ٣

    இலாஹின் நாஸ்

    (அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்.

  5. مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ٤

    மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ்

    மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).

  6. الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ٥

    அல்லதீ யுவஸ்விஸு ஃபீ ஸுதூரின் நாஸ்

    (4, 5 ஆகிய வசனங்கள் மேலே ஒன்றாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.)

  7. مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ٦

    மினல் ஜின்னதி வன் நாஸ்

    (அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.

குர்ஆன் 114:1-6 · அபூதாவூத் 5082 (ஹஸன், அல்பானீ) · திர்மிதி 3575 (ஹஸன், தாருஸ்ஸலாம்) · ஹிஸ்னுல் முஸ்லிம் 76

ஸூரத்துல் பகரா 285–286

பசு மாடு அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்கள் (குர்ஆன் 2)

இரவில் இவற்றை ஓதுபவருக்குப் போதுமானவை.

  1. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

    பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)

  2. آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ

    ஆமனர் ரஸூலு பிமா உன்ஸில இலைஹி மிர் ரப்பிஹீ வல் முஃமினூன்

    (மனிதர்களே! நம்) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்ட (வேதத்)தை மெய்யாகவே நம்பிக்கை கொள்கிறார். (அவ்வாறே மற்ற) நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொள்கின்றனர்.

  3. كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ

    குல்லுன் ஆமன பில்லாஹி வ மலாஇகதிஹீ வ குதுபிஹீ வ ருஸுலிஹ்

    இவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர்.

  4. لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ

    லா நுஃபர்ரிகு பைன அஹதிம் மிர் ருஸுலிஹ்

    தவிர, ‘‘அவனுடைய தூதர்களில் எவரையும் (தூதர் அல்ல என்று) நாங்கள் பிரித்து (நிராகரித்து)விட மாட்டோம்'' என்றும்,

  5. وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ

    வ காலூ ஸமிஃனா வ அதஃனா

    ‘‘(இறைவனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். (உன் கட்டளைக்கு) நாங்கள் கீழ்ப்படிந்தோம்.

  6. غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ ٢٨٥

    குஃப்ரானக ரப்பனா வ இலைகல் மஸீர்

    எங்கள் இறைவனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடம்தான் நாங்கள் சேர வேண்டியதிருக்கிறது'' என்றும் கூறுகிறார்கள்.

  7. لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ

    லா யுகல்லிஃபுல்லாஹு நஃப்ஸன் இல்லா வுஸ்அஹா

    அல்லாஹ் ஓர் ஆத்மாவை அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை.

  8. لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ

    லஹா மா கஸபத் வ அலைஹா மக்தஸபத்

    அவை தேடிக் கொண்ட நன்மை அவற்றுக்கே (பயனளிக்கும்). அவை தேடிக்கொண்ட தீமை அவற்றுக்கே (கேடு விளைவிக்கும்).

  9. رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ

    ரப்பனா லா துஆகித்னா இன் நஸீனா அவ் அக்தஃனா

    ‘‘எங்கள் இறைவனே! நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்து விட்டாலும் அல்லது அதில் தவறிழைத்துவிட்டாலும் அதைப் பற்றி நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே!

  10. رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ

    ரப்பனா வ லா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்தஹூ அலல் லதீன மின் கப்லினா

    எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது (கடினமான கட்டளைகளை விதித்து) பளுவான சுமையை சுமத்திவிடாதே. எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது (கடினமான கட்டளைகளை) நீ சுமத்தியவாறு (சுமத்தாதே!).

  11. رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ

    ரப்பனா வ லா துஹம்மில்னா மா லா தாகத லனா பிஹ்

    எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க முடியாத சிரமங்களை எங்கள் மீது சுமத்திவிடாதே!

  12. وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ

    வஃஃபு அன்னா வக்ஃபிர் லனா வர்ஹம்னா

    எங்கள் (குற்றங்களை) அழிப்பாயாக! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக!

  13. أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ٢٨٦

    அன்த மவ்லானா ஃபன்ஸுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்

    நீதான் எங்கள் பாதுகாவலன்! ஆகவே, (உன்னை) நிராகரிக்கும் கூட்டங்கள் மீது (வெற்றிபெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!

குர்ஆன் 2:285-286 · சிறப்பு: புகாரி 5009, முஸ்லிம் 808a · இதன் சிறப்பு இரவில் ஓதுவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

துஆக்கள்

அஸ்பஹ்னா வ அஸ்பஹல் முல்கு லில்லாஹ்

ஆட்சி அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது

  1. أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ

    அஸ்பஹ்னா வ அஸ்பஹல் முல்கு லில்லாஹ், வல் ஹம்து லில்லாஹ்

    நாங்கள் காலையை அடைந்தோம், ஆட்சியும் அல்லாஹ்வுக்குரியதாகக் காலையை அடைந்தது; புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.

  2. لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ

    லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹ்

    அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை இல்லை.

  3. لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

    லஹுல் முல்கு வ லஹுல் ஹம்த், வ ஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்

    ஆட்சி அவனுக்கே உரியது, புகழும் அவனுக்கே உரியது, அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் உள்ளவன்.

  4. رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَٰذَا الْيَوْمِ وَخَيْرَ مَا بَعْدَهُ

    ரப்பி அஸ்அலுக கைர மா ஃபீ ஹாதல் யவ்மி வ கைர மா பஃதஹ்

    என் இறைவனே! இந்த நாளில் உள்ள நன்மையையும் இதற்குப் பின் உள்ள நன்மையையும் உன்னிடம் கேட்கிறேன்,

  5. وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَٰذَا الْيَوْمِ وَشَرِّ مَا بَعْدَهُ

    வ அஊது பிக மின் ஷர்ரி மா ஃபீ ஹாதல் யவ்மி வ ஷர்ரி மா பஃதஹ்

    இந்த நாளில் உள்ள தீமையையும் இதற்குப் பின் உள்ள தீமையையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

  6. رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ

    ரப்பி அஊது பிக மினல் கஸலி வ ஸூஇல் கிபர்

    என் இறைவனே! சோம்பலையும் முதுமையின் தீமையையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

  7. رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ

    ரப்பி அஊது பிக மின் அதாபின் ஃபின் நாரி வ அதாபின் ஃபில் கப்ர்

    என் இறைவனே! நரகத்தின் வேதனையையும் கப்ரின் வேதனையையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

மாலையில்:

அம்ஸைனா வ அம்ஸல் முல்கு லில்லாஹ்

  1. أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ

    அம்ஸைனா வ அம்ஸல் முல்கு லில்லாஹ், வல் ஹம்து லில்லாஹ்

    நாங்கள் மாலையை அடைந்தோம், ஆட்சியும் அல்லாஹ்வுக்குரியதாக மாலையை அடைந்தது; புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.

  2. رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَٰذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا

    ரப்பி அஸ்அலுக கைர மா ஃபீ ஹாதிஹில் லைலதி வ கைர மா பஃதஹா

    என் இறைவனே! இந்த இரவில் உள்ள நன்மையையும் இதற்குப் பின் உள்ள நன்மையையும் உன்னிடம் கேட்கிறேன்,

  3. وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَٰذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا

    வ அஊது பிக மின் ஷர்ரி மா ஃபீ ஹாதிஹில் லைலதி வ ஷர்ரி மா பஃதஹா

    இந்த இரவில் உள்ள தீமையையும் இதற்குப் பின் உள்ள தீமையையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

முஸ்லிம் 2723b · ஹிஸ்னுல் முஸ்லிம் 77

அல்லாஹும்ம பிக அஸ்பஹ்னா

உன்னைக் கொண்டே வாழ்கிறோம், மரணிக்கிறோம்

  1. اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا

    அல்லாஹும்ம பிக அஸ்பஹ்னா, வ பிக அம்ஸைனா

    அல்லாஹ்வே! உன்னைக் கொண்டே காலையை அடைந்தோம், உன்னைக் கொண்டே மாலையை அடைந்தோம்,

  2. وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ

    வ பிக நஹ்யா, வ பிக நமூது, வ இலைகன் நுஷூர்

    உன்னைக் கொண்டே வாழ்கிறோம், உன்னைக் கொண்டே மரணிக்கிறோம், உன்னிடமே எழுப்பப்படுதல் உள்ளது.

மாலையில்:

அல்லாஹும்ம பிக அம்ஸைனா

  1. اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا

    அல்லாஹும்ம பிக அம்ஸைனா

    அல்லாஹ்வே! உன்னைக் கொண்டே மாலையை அடைந்தோம்,

அபூதாவூத் 5068 (ஸஹீஹ், அல்பானீ) · ஹிஸ்னுல் முஸ்லிம் 78

ஸய்யிதுல் இஸ்திஃபார்

பாவமன்னிப்புக் கோருவதில் மிகச் சிறந்த முறை

உறுதியுடன் கூறி அன்றே இறந்தால், அவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்.

  1. اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ

    அல்லாஹும்ம அன்த ரப்பீ, லா இலாஹ இல்லா அன்த்

    அல்லாஹ்வே! நீயே என் இறைவன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.

  2. خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ

    கலக்தனீ வ அன அப்துக்

    நீ என்னைப் படைத்தாய், நான் உன் அடியான்,

  3. وَأَنَا عَلَىٰ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ

    வ அன அலா அஹ்திக வ வஃதிக மஸ்ததஃத்

    என்னால் இயன்றவரை உன் ஒப்பந்தத்தின் மீதும் உன் வாக்குறுதியின் மீதும் இருக்கிறேன்.

  4. أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ

    அஊது பிக மின் ஷர்ரி மா ஸனஃத்

    நான் செய்தவற்றின் தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

  5. أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي

    அபூஉ லக பி நிஃமதிக அலய்ய, வ அபூஉ லக பி தன்பீ

    நீ எனக்குச் செய்த அருளை உன்னிடம் ஒப்புக்கொள்கிறேன், என் பாவத்தையும் உன்னிடம் ஒப்புக்கொள்கிறேன்,

  6. فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

    ஃபக்ஃபிர் லீ, ஃப இன்னஹூ லா யக்ஃபிருத் துனூப இல்லா அன்த்

    ஆகவே என்னை மன்னிப்பாயாக, உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யாருமில்லை.

மாலையில்:

உறுதியுடன் கூறி அன்றிரவே இறந்தால், அவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்.

புகாரி 6306 · ஹிஸ்னுல் முஸ்லிம் 79

அல்லாஹும்ம ஃபாதிரஸ் ஸமாவாதி வல் அர்ள்

தன் உள்ளத்தின் தீமை, ஷைத்தானின் தீமையிலிருந்து பாதுகாப்பு

  1. اللَّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ

    அல்லாஹும்ம ஃபாதிரஸ் ஸமாவாதி வல் அர்ள், ஆலிமல் கைபி வஷ் ஷஹாதஹ்

    அல்லாஹ்வே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே, மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவனே,

  2. لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ

    லா இலாஹ இல்லா அன்த், ரப்ப குல்லி ஷைஇன் வ மலீகஹ்

    உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, ஒவ்வொரு பொருளின் இறைவனும் அதிபதியும் நீயே.

  3. أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشَرَكِهِ

    அஊது பிக மின் ஷர்ரி நஃப்ஸீ, வ மின் ஷர்ரிஷ் ஷைதானி வ ஷரகிஹ்

    என் உள்ளத்தின் தீமையை விட்டும், ஷைத்தானின் தீமையையும் அவனது வலைகளையும் விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்,

  4. وَأَنْ أَقْتَرِفَ عَلَىٰ نَفْسِي سُوءًا، أَوْ أَجُرَّهُ إِلَىٰ مُسْلِمٍ

    வ அன் அக்தரிஃப அலா நஃப்ஸீ ஸூஅன், அவ் அஜுர்ரஹூ இலா முஸ்லிம்

    எனக்கு நானே தீங்கிழைப்பதை விட்டும், அதை ஒரு முஸ்லிமின் மீது சுமத்துவதை விட்டும்.

திர்மிதி 3529 (ஹஸன், தாருஸ்ஸலாம்) · ஹிஸ்னுல் முஸ்லிம் 85

அல்லாஹும்ம இன்னீ அஸ்பஹ்து உஷ்ஹிதுக

ஈமானின் சாட்சியத்திற்கு அல்லாஹ்வைச் சாட்சியாக்குதல்

×4

நான்கு முறை கூறினால், அல்லாஹ் அவரை நரகிலிருந்து விடுவிப்பான்.

  1. اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشْهِدُكَ

    அல்லாஹும்ம இன்னீ அஸ்பஹ்து உஷ்ஹிதுக்

    அல்லாஹ்வே! இந்தக் காலையில் உன்னைச் சாட்சியாக்குகிறேன்,

  2. وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ، وَمَلَائِكَتَكَ، وَجَمِيعَ خَلْقِكَ

    வ உஷ்ஹிது ஹமலத அர்ஷிக, வ மலாஇகதக, வ ஜமீஅ கல்கிக்

    உன் அர்ஷைச் சுமப்பவர்களையும், உன் வானவர்களையும், உன் படைப்புகள் அனைத்தையும் சாட்சியாக்குகிறேன்

  3. أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ

    அன்னக அன்தல்லாஹு லா இலாஹ இல்லா அன்த்

    நீயே அல்லாஹ்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதற்கும்,

  4. وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ

    வ அன்ன முஹம்மதன் அப்துக வ ரஸூலுக்

    முஹம்மது உன் அடியாரும் உன் தூதரும் ஆவார் என்பதற்கும்.

மாலையில்:

அல்லாஹும்ம இன்னீ அம்ஸைது உஷ்ஹிதுக

  1. اللَّهُمَّ إِنِّي أَمْسَيْتُ أُشْهِدُكَ

    அல்லாஹும்ம இன்னீ அம்ஸைது உஷ்ஹிதுக்

    அல்லாஹ்வே! இந்த மாலையில் உன்னைச் சாட்சியாக்குகிறேன்,

அபூதாவூத் 5069 (ளயீஃப் (பலவீனமானது), அல்பானீ; அறிவிப்பாளர் தொடர் ஹஸன், இப்னு பாஸ்) · ஹிஸ்னுல் முஸ்லிம் 80

பிஸ்மில்லாஹில் லதீ லா யளுர்ரு

அல்லாஹ்வின் பெயரால் பாதுகாப்பு

×3

மாலை வரை திடீர் துன்பம் எதுவும் அவரைத் தாக்காது.

  1. بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ

    பிஸ்மில்லாஹில் லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹீ ஷைஃ

    அல்லாஹ்வின் பெயரால், அவனது பெயருடன் எந்தப் பொருளும் தீங்கிழைக்க முடியாது

  2. فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ

    ஃபில் அர்ளி வ லா ஃபிஸ் ஸமாஃ

    பூமியிலும் இல்லை, வானத்திலும் இல்லை,

  3. وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

    வ ஹுவஸ் ஸமீஉல் அலீம்

    அவன் எல்லாவற்றையும் கேட்பவன், எல்லாவற்றையும் அறிந்தவன்.

மாலையில்:

காலை வரை திடீர் துன்பம் எதுவும் அவரைத் தாக்காது.

அபூதாவூத் 5088 (ஸஹீஹ், அல்பானீ) · திர்மிதி 3388 (ஹஸன், தாருஸ்ஸலாம்) · ஹிஸ்னுல் முஸ்லிம் 86

அஊது பி கலிமாதில்லாஹ்

அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகளைக் கொண்டு பாதுகாப்பு

×3 · மாலையில் மட்டும்

அந்த இரவில் எந்தக் கொட்டுதலும் அவருக்குத் தீங்கிழைக்காது.

  1. أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ

    அஊது பி கலிமாதில்லாஹித் தாம்மாத்

    அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகளைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்

  2. مِنْ شَرِّ مَا خَلَقَ

    மின் ஷர்ரி மா கலக்

    அவன் படைத்தவற்றின் தீமையை விட்டும்.

திர்மிதி 3604b (ஸஹீஹ், தாருஸ்ஸலாம்) · முஸ்லிம் 2709a · ஹிஸ்னுல் முஸ்லிம் 97

ரளீது பில்லாஹி ரப்பா

அல்லாஹ், இஸ்லாம், நபி ﷺ ஆகியோரைக் கொண்டு திருப்தி

முழு சுன்னா ×3

மறுமை நாளில் அவரைத் திருப்திப்படுத்துவது அல்லாஹ்வின் மீது கடமையாகும்.

  1. رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا

    ரளீது பில்லாஹி ரப்பா, வ பில் இஸ்லாமி தீனா

    அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும்,

  2. وَبِمُحَمَّدٍ نَبِيًّا

    வ பி முஹம்மதின் நபிய்யா

    முஹம்மது ﷺ அவர்களை நபியாகவும் ஏற்று நான் திருப்தியடைந்தேன்.

இப்னு மாஜா 3870 (ஹஸன், தாருஸ்ஸலாம்; ளயீஃப் (பலவீனமானது), அல்பானீ) · திர்மிதி 3389 · ஹிஸ்னுல் முஸ்லிம் 87 · அஹ்மத் 18969-இல் மூன்று முறை (ளயீஃப், அல்பானீ; அறிவிப்பாளர் தொடர் ஹஸன், இப்னு பாஸ், பார்க்க: ஹிஸ்னுல் முஸ்லிம் 87).

அல்லாஹும்ம மா அஸ்பஹ பீ மின் நிஃமஹ்

ஒவ்வோர் அருளும் அல்லாஹ்விடமிருந்து மட்டுமே

அவர் அந்த நாளுக்குரிய நன்றியைச் செலுத்திவிட்டார்.

  1. اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ

    அல்லாஹும்ம மா அஸ்பஹ பீ மின் நிஃமஹ்

    அல்லாஹ்வே! இந்தக் காலையில் என்னிடம் உள்ள எந்த அருளும்

  2. فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ

    ஃப மின்க வஹ்தக லா ஷரீக லக்

    உன்னிடமிருந்து மட்டுமே வந்தது, உனக்கு இணை இல்லை,

  3. فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ

    ஃப லகல் ஹம்து வ லகஷ் ஷுக்ர்

    ஆகவே புகழும் உனக்கே, நன்றியும் உனக்கே.

மாலையில்:

அல்லாஹும்ம மா அம்ஸா பீ மின் நிஃமஹ்

  1. اللَّهُمَّ مَا أَمْسَى بِي مِنْ نِعْمَةٍ

    அல்லாஹும்ம மா அம்ஸா பீ மின் நிஃமஹ்

    அல்லாஹ்வே! இந்த மாலையில் என்னிடம் உள்ள எந்த அருளும்

அவர் அந்த இரவுக்குரிய நன்றியைச் செலுத்திவிட்டார்.

அபூதாவூத் 5073 (ளயீஃப் (பலவீனமானது), அல்பானீ; அறிவிப்பாளர் தொடர் ஹஸன், இப்னு பாஸ்) · ஹிஸ்னுல் முஸ்லிம் 81

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஆஃபியஹ்

நலமும் பாதுகாப்பும் கேட்டல்

நபி ﷺ காலையிலும் மாலையிலும் இவற்றைக் கூறுவதை ஒருபோதும் விட்டதில்லை.

  1. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

    அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஆஃபியத ஃபித் துன்யா வல் ஆகிரஹ்

    அல்லாஹ்வே! இம்மையிலும் மறுமையிலும் உன்னிடம் நலத்தைக் கேட்கிறேன்.

  2. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ

    அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் அஃப்வ வல் ஆஃபியஹ்

    அல்லாஹ்வே! உன்னிடம் மன்னிப்பையும் நலத்தையும் கேட்கிறேன்

  3. فِي دِينِي وَدُنْيَايَ، وَأَهْلِي وَمَالِي

    ஃபீ தீனீ வ துன்யாய, வ அஹ்லீ வ மாலீ

    என் மார்க்கத்திலும் உலக வாழ்விலும், என் குடும்பத்திலும் செல்வத்திலும்.

  4. اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي

    அல்லாஹும்மஸ்துர் அவ்ராதீ, வ ஆமின் ரவ்ஆதீ

    அல்லாஹ்வே! என் குறைகளை மறைப்பாயாக, என் அச்சங்களை அமைதியாக்குவாயாக.

  5. اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي

    அல்லாஹும்மஹ்ஃபள்னீ மின் பைனி யதய்ய, வ மின் கல்ஃபீ

    அல்லாஹ்வே! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் என்னைப் பாதுகாப்பாயாக,

  6. وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي

    வ அன் யமீனீ, வ அன் ஷிமாலீ, வ மின் ஃபவ்கீ

    என் வலப்புறத்திலிருந்தும், இடப்புறத்திலிருந்தும், மேலிருந்தும்,

  7. وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي

    வ அஊது பி அளமதிக அன் உக்தால மின் தஹ்தீ

    எனக்குக் கீழிருந்து திடீரென அழிக்கப்படுவதை விட்டு உன் மகத்துவத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்.

அபூதாவூத் 5074 (ஸஹீஹ், அல்பானீ) · இப்னு மாஜா 3871 (ஸஹீஹ், தாருஸ்ஸலாம்) · ஹிஸ்னுல் முஸ்லிம் 84

லா இலாஹ இல்லல்லாஹ்

அல்லாஹ்வின் ஏகத்துவப் பிரகடனம்

இஸ்மாயீலின் வழித்தோன்றல்களில் ஓர் அடிமையை விடுதலை செய்தது போன்றது; மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு.

  1. لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ

    லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹ்

    அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை இல்லை.

  2. لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

    லஹுல் முல்கு வ லஹுல் ஹம்த், வ ஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்

    ஆட்சி அவனுக்கே உரியது, புகழும் அவனுக்கே உரியது, அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் உள்ளவன்.

மாலையில்:

இஸ்மாயீலின் வழித்தோன்றல்களில் ஓர் அடிமையை விடுதலை செய்தது போன்றது; காலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு.

அபூதாவூத் 5077 (ஸஹீஹ், அல்பானீ) · ஹிஸ்னுல் முஸ்லிம் 92

யா ஹய்யு யா கய்யூம்

எல்லாக் காரியங்களையும் சீராக்க அல்லாஹ்விடம் கேட்டல்

நபி ﷺ இதை ஃபாத்திமா அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.

  1. يَا حَيُّ يَا قَيُّومُ، بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

    யா ஹய்யு யா கய்யூம், பி ரஹ்மதிக அஸ்தகீஸ்

    என்றும் உயிருள்ளவனே! அனைத்தையும் நிர்வகிப்பவனே! உன் அருளைக் கொண்டு உதவி தேடுகிறேன்.

  2. أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ

    அஸ்லிஹ் லீ ஷஃனீ குல்லஹ்

    என் காரியங்கள் அனைத்தையும் சீராக்குவாயாக,

  3. وَلَا تَكِلْنِي إِلَىٰ نَفْسِي طَرْفَةَ عَيْنٍ

    வ லா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத ஐன்

    கண் இமைக்கும் நேரம் கூட என்னை என்னிடமே ஒப்படைத்துவிடாதே.

நஸாயீ, அஸ்ஸுனனுல் குப்ரா 10405 (ஹஸன், அல்பானீ) · ஹிஸ்னுல் முஸ்லிம் 88

லா இலாஹ இல்லல்லாஹ்… யுஹ்யீ வ யுமீத்

அல்லாஹ்வின் ஏகத்துவப் பிரகடனம்: அவனே உயிர்ப்பிக்கிறான், மரணிக்கச் செய்கிறான்

×10 · காலையில் மட்டும்

  1. لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ

    லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹ்

    அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை இல்லை.

  2. لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ

    லஹுல் முல்கு வ லஹுல் ஹம்த், யுஹ்யீ வ யுமீத்

    ஆட்சி அவனுக்கே உரியது, புகழும் அவனுக்கே உரியது; அவனே உயிர்ப்பிக்கிறான், அவனே மரணிக்கச் செய்கிறான்,

  3. وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

    வ ஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்

    அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் உள்ளவன்.

திர்மிதி 3474 (ஹஸன், தாருஸ்ஸலாம்) · இந்த அறிவிப்பில் இது ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கூறப்படுகிறது.

ஸுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹீ அதத கல்கிஹ்

அவனது படைப்புகளின் எண்ணிக்கை அளவு அல்லாஹ்வைத் துதித்தல்

×3 · காலையில் மட்டும்

மூன்று முறை கூறப்பட்ட இவை, ஜுவைரிய்யா ஃபஜ்ரிலிருந்து முற்பகல் வரை கூறிய அனைத்துடனும் எடைபோடப்பட்டால், அவற்றை விட எடை மிகுந்துவிடும்.

  1. سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، عَدَدَ خَلْقِهِ

    ஸுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹீ, அதத கல்கிஹ்

    அல்லாஹ் தூயவன், அவனைப் புகழ்கிறேன், அவனது படைப்புகளின் எண்ணிக்கை அளவு,

  2. وَرِضَا نَفْسِهِ

    வ ரிளா நஃப்ஸிஹ்

    அவனது திருப்தியின் அளவு,

  3. وَزِنَةَ عَرْشِهِ

    வ ஸினத அர்ஷிஹ்

    அவனது அர்ஷின் எடை அளவு,

  4. وَمِدَادَ كَلِمَاتِهِ

    வ மிதாத கலிமாதிஹ்

    அவனது வார்த்தைகளின் மையின் அளவு.

முஸ்லிம் 2726 · ஹிஸ்னுல் முஸ்லிம் 94

கைர ஹாதல் யவ்ம்

இந்த நாளின் நன்மையைக் கேட்டல்

  1. أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

    அஸ்பஹ்னா வ அஸ்பஹல் முல்கு லில்லாஹி ரப்பில் ஆலமீன்

    நாங்கள் காலையை அடைந்தோம், ஆட்சியும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்குரியதாகக் காலையை அடைந்தது.

  2. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ هَٰذَا الْيَوْمِ

    அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைர ஹாதல் யவ்ம்

    அல்லாஹ்வே! இந்த நாளின் நன்மையை உன்னிடம் கேட்கிறேன்:

  3. فَتْحَهُ، وَنَصْرَهُ، وَنُورَهُ، وَبَرَكَتَهُ، وَهُدَاهُ

    ஃபத்ஹஹூ, வ நஸ்ரஹூ, வ நூரஹூ, வ பரகதஹூ, வ ஹுதாஹ்

    அதன் வெற்றியையும், அதன் உதவியையும், அதன் ஒளியையும், அதன் அருள்வளத்தையும், அதன் நேர்வழியையும்,

  4. وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيهِ وَشَرِّ مَا بَعْدَهُ

    வ அஊது பிக மின் ஷர்ரி மா ஃபீஹி வ ஷர்ரி மா பஃதஹ்

    அதிலுள்ள தீமையையும் அதற்குப் பின் உள்ள தீமையையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

மாலையில்:

கைர ஹாதிஹில் லைலஹ்

  1. أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

    அம்ஸைனா வ அம்ஸல் முல்கு லில்லாஹி ரப்பில் ஆலமீன்

    நாங்கள் மாலையை அடைந்தோம், ஆட்சியும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்குரியதாக மாலையை அடைந்தது.

  2. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ هَٰذِهِ اللَّيْلَةِ

    அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைர ஹாதிஹில் லைலஹ்

    அல்லாஹ்வே! இந்த இரவின் நன்மையை உன்னிடம் கேட்கிறேன்:

  3. فَتْحَهَا، وَنَصْرَهَا، وَنُورَهَا، وَبَرَكَتَهَا، وَهُدَاهَا

    ஃபத்ஹஹா, வ நஸ்ரஹா, வ நூரஹா, வ பரகதஹா, வ ஹுதாஹா

    அதன் வெற்றியையும், அதன் உதவியையும், அதன் ஒளியையும், அதன் அருள்வளத்தையும், அதன் நேர்வழியையும்,

  4. وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا بَعْدَهَا

    வ அஊது பிக மின் ஷர்ரி மா ஃபீஹா வ ஷர்ரி மா பஃதஹா

    அதிலுள்ள தீமையையும் அதற்குப் பின் உள்ள தீமையையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

அபூதாவூத் 5084 (ளயீஃப் (பலவீனமானது), அல்பானீ) · ஹிஸ்னுல் முஸ்லிம் 89

அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ பதனீ

உடல், செவி, பார்வையில் நலம்

×3

  1. اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي

    அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ பதனீ

    அல்லாஹ்வே! என் உடலில் எனக்கு நலம் அளிப்பாயாக.

  2. اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي

    அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ ஸம்ஈ

    அல்லாஹ்வே! என் செவியில் எனக்கு நலம் அளிப்பாயாக.

  3. اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي

    அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ பஸரீ

    அல்லாஹ்வே! என் பார்வையில் எனக்கு நலம் அளிப்பாயாக.

  4. لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ

    லா இலாஹ இல்லா அன்த்

    உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.

  5. اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ

    அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குஃப்ரி வல் ஃபக்ர்

    அல்லாஹ்வே! இறைமறுப்பையும் வறுமையையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

  6. اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

    அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அதாபில் கப்ர்

    அல்லாஹ்வே! கப்ரின் வேதனையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

  7. لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ

    லா இலாஹ இல்லா அன்த்

    உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.

அபூதாவூத் 5090 (அறிவிப்பாளர் தொடர் ஹஸன், அல்பானீ) · ஹிஸ்னுல் முஸ்லிம் 82

அஸ்பஹ்னா அலா ஃபித்ரதில் இஸ்லாம்

இஸ்லாம் எனும் இயற்கை நெறியின் மீது

  1. أَصْبَحْنَا عَلَىٰ فِطْرَةِ الْإِسْلَامِ

    அஸ்பஹ்னா அலா ஃபித்ரதில் இஸ்லாம்

    இஸ்லாத்தின் இயற்கை நெறியின் மீது நாங்கள் காலையை அடைந்தோம்,

  2. وَعَلَىٰ كَلِمَةِ الْإِخْلَاصِ

    வ அலா கலிமதில் இக்லாஸ்

    இக்லாஸின் வார்த்தையின் மீதும்,

  3. وَعَلَىٰ دِينِ نَبِيِّنَا مُحَمَّدٍ ﷺ

    வ அலா தீனி நபிய்யினா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்

    எங்கள் நபி முஹம்மது ﷺ அவர்களின் மார்க்கத்தின் மீதும்,

  4. وَعَلَىٰ مِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ، حَنِيفًا مُسْلِمًا

    வ அலா மில்லதி அபீனா இப்ராஹீம, ஹனீஃபம் முஸ்லிமா

    நேர்வழியில் நின்ற முஸ்லிமான எங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தின் மீதும்,

  5. وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ

    வ மா கான மினல் முஷ்ரிகீன்

    அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை.

மாலையில்:

அம்ஸைனா அலா ஃபித்ரதில் இஸ்லாம்

  1. أَمْسَيْنَا عَلَىٰ فِطْرَةِ الْإِسْلَامِ

    அம்ஸைனா அலா ஃபித்ரதில் இஸ்லாம்

    இஸ்லாத்தின் இயற்கை நெறியின் மீது நாங்கள் மாலையை அடைந்தோம்,

அஹ்மத் 15360 · அஹ்மத் 15363 · ஹிஸ்னுல் முஸ்லிம் 90 · காலை: ஸஹீஹ் (அல்பானீ). மாலையிலும்: இப்னு பாஸின் கருத்துப்படி அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹ்; அல்பானீ அந்தக் கூடுதலை ஷாத் (வழக்கத்திற்கு மாறானது) எனக் கருதினார்.

இல்மன் நாஃபிஆ

பயனுள்ள கல்வி, தூய வாழ்வாதாரம், ஏற்கப்பட்ட செயல்

காலையில் மட்டும்

  1. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا

    அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக இல்மன் நாஃபிஆ

    அல்லாஹ்வே! பயனுள்ள கல்வியையும்,

  2. وَرِزْقًا طَيِّبًا

    வ ரிஸ்கன் தய்யிபா

    தூய்மையான வாழ்வாதாரத்தையும்,

  3. وَعَمَلًا مُتَقَبَّلًا

    வ அமலன் முதகப்பலா

    ஏற்றுக்கொள்ளப்பட்ட செயலையும் உன்னிடம் கேட்கிறேன்.

இப்னு மாஜா 925 (ஸஹீஹ், தாருஸ்ஸலாம்) · ஹிஸ்னுல் முஸ்லிம் 95 · இந்த அறிவிப்பில் இது ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கூறப்படுகிறது.

சிறிய திக்ருகள்

ஹஸ்பியல்லாஹ்

அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்

×7

  1. حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ

    ஹஸ்பியல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ

    அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.

  2. عَلَيْهِ تَوَكَّلْتُ، وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

    அலைஹி தவக்கல்து, வ ஹுவ ரப்புல் அர்ஷில் அளீம்

    அவன் மீதே நான் நம்பிக்கை வைத்தேன், அவனே மகத்தான அர்ஷின் இறைவன்.

அபூதாவூத் 5081 (மவ்ளூஃ (இட்டுக்கட்டப்பட்டது), அல்பானீ) · ஹிஸ்னுல் முஸ்லிம் 83

அஸ்தக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹ்

பாவமன்னிப்புக் கோரி தவ்பா செய்தல்

×10 · முழு சுன்னா ×100

நபி ﷺ ஒரு நாளில் நூறு முறை பாவமன்னிப்புக் கோரி தவ்பா செய்தார்கள்.

  1. أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ

    அஸ்தக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹ்

    அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன், அவனிடம் தவ்பா செய்து மீள்கிறேன்.

இப்னு மாஜா 3815 (ஹஸன், தாருஸ்ஸலாம்) · முஸ்லிம் 2702a · புகாரி 6307 · ஹிஸ்னுல் முஸ்லிம் 96

ஸுப்ஹானல்லாஹ்

அல்லாஹ் தூயவன்

×10

  1. سُبْحَانَ اللَّهِ

    ஸுப்ஹானல்லாஹ்

    அல்லாஹ் தூயவன்.

பொதுவான திக்ர்; காலைக்கோ மாலைக்கோ தனி அறிவிப்பு இல்லை.

அல் ஹம்து லில்லாஹ்

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே

×10

  1. الْحَمْدُ لِلَّهِ

    அல் ஹம்து லில்லாஹ்

    புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.

பொதுவான திக்ர்; காலைக்கோ மாலைக்கோ தனி அறிவிப்பு இல்லை.

அல்லாஹு அக்பர்

அல்லாஹ் மிகப் பெரியவன்

×10

  1. اللَّهُ أَكْبَرُ

    அல்லாஹு அக்பர்

    அல்லாஹ் மிகப் பெரியவன்.

பொதுவான திக்ர்; காலைக்கோ மாலைக்கோ தனி அறிவிப்பு இல்லை.

லா இலாஹ இல்லல்லாஹ் ×10

அல்லாஹ்வின் ஏகத்துவப் பிரகடனம்

×10

இஸ்மாயீலின் வழித்தோன்றல்களில் நான்கு பேரை விடுதலை செய்தது போன்றது.

  1. لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ

    லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹ்

    அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை இல்லை.

  2. لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

    லஹுல் முல்கு வ லஹுல் ஹம்த், வ ஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்

    ஆட்சி அவனுக்கே உரியது, புகழும் அவனுக்கே உரியது, அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் உள்ளவன்.

முஸ்லிம் 2693 · புகாரி 6404 · ஹிஸ்னுல் முஸ்லிம் 92 · சிறப்பு: முஸ்லிம் 2693

ஸுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹ்

அல்லாஹ் தூயவன், அவனைப் புகழ்கிறேன்

×10 · முழு சுன்னா ×100

நூறு முறை: மறுமை நாளில் இதைவிடச் சிறந்ததை எவரும் கொண்டுவர மாட்டார், இதே அளவோ அதைவிட அதிகமாகவோ கூறியவரைத் தவிர.

  1. سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

    ஸுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹ்

    அல்லாஹ் தூயவன், அவனைப் புகழ்கிறேன்.

முஸ்லிம் 2692 · புகாரி 6405 · ஹிஸ்னுல் முஸ்லிம் 91 · சுன்னாவில் எண்ணிக்கை நூறு.

அஸ்ஸலாதுல் இப்ராஹீமிய்யா

நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத் கூறுதல்

முழு சுன்னா ×10

நபி ﷺ அவர்கள் மீது ஒருமுறை ஸலவாத் கூறுபவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான்.

  1. اللَّهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ

    அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத்

    அல்லாஹ்வே! முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக,

  2. كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ

    கமா ஸல்லைத அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம்

    இப்ராஹீமின் மீதும் இப்ராஹீமின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்தது போல;

  3. إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

    இன்னக ஹமீதும் மஜீத்

    நிச்சயமாக நீ புகழுக்குரியவன், மகிமை மிக்கவன்.

  4. اللَّهُمَّ بَارِكْ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ

    அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத்

    அல்லாஹ்வே! முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் அருள்வளம் பொழிவாயாக,

  5. كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ

    கமா பாரக்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம்

    இப்ராஹீமின் மீதும் இப்ராஹீமின் குடும்பத்தார் மீதும் நீ அருள்வளம் பொழிந்தது போல;

  6. إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

    இன்னக ஹமீதும் மஜீத்

    நிச்சயமாக நீ புகழுக்குரியவன், மகிமை மிக்கவன்.

புகாரி 3370 · சிறப்பு: முஸ்லிம் 408 · காலையிலும் மாலையிலும் பத்து முறை: தபரானீ அறிவித்தது (பார்க்க: ஹிஸ்னுல் முஸ்லிம் 98); ளயீஃப் (அல்பானீ).